சென்னை:
மிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முதலமைச்சர் அறிவுரையின்படி விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. “விளையாட்டுத்துறையினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க முதலமைச்சர் உத்தரவு; அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.