சோமாலியா,

சோமாலியா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அங்கு வாழும் மக்களின் பரிதாப நிலைமை தான்.

கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் சோமாலியாவில் மழை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அந்த பிரார்த்தனையில் சோமாலியா பிரதமர் பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

வறட்சியை போக்கவும், மழை பெய்ய வேண்டியும் தேசிய பிரார்த்தனை நடைபெற்றது. அதில் பிரதமர் அலி ஹசான் கெய்ரா பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து  தலைநகர் மோகடிஷூவில் நடைபெற்ற பேரணியில்  அலி ஹசான் , சோமாலிய மக்களிடம் இருந்து வறட்சி சுமையை நீக்கிவிட வேண்டும் என்று கடவுளிடம் கேட்டு கொண்டதாக தெரிவித்தார்.

பிரதமர் அலி ஹசான் கெய்ரா

இந்த வறட்சியை தேசிய பேரழிவாக அறிவித்திருக்கும் அதிபர் முகமது அப்துல்லாஹி ஃபர்மாஜோ, சர்வதேச உதவியை கோரியுள்ளார்.

ஆனால், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் உணவு பொருட்களை அங்குள்ள பயங்கர வாதிகள் அபகரித்து சென்றுவிடுகின்றனர். அதை சோமாலியா அரசால் தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு செல்லவேண்டிய உணவு பொருட்கள் தடுக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

சோமாலியா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்திருக்கிறது.