Adani
ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் நிலக்கிர சுரங்க திட்டத்தை அதானி குழுமம் உடனடியாக நிறுத்து வலியுறுத்தும் கடிதத்தில் அந்நாட்டு முன்னாள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் கேப்டன் ஐயன் கிரெக் சப்பல் கையெழுத்திட்டுள்ளார். இரு தரப்பு உறவுகளையும், விளையாட்டு தொடர்புகளையும் இது பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் உள்பட ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ரிச்சர்டு பிளாநகன் மற்றும் டிம் விண்டன், ஜான் முல்லன், வங்கியாளர் மார்க் பரோப்ஸ் உள்பட 90 பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர் இந்த கடிதம் குஜராத்தின் உள்ள அதான குழுமத்திற்கு இன்னும் சில தினங்களில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதிநிதி ஒருவரால் நேரில் வழங்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் 21.7 பில்லியன் டாலர் முதலீட்டில் உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க திட்ட கட்டுமான பணிகளை இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் செயல்படுத்தவுள்ளது. குவின்ஸ்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியதை தொடர்நது கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக பாரியர் ரீப் கடல் பூங்கா அருகே நிலத்தை சேதப்படுத்தி 1.1 மில்லியன் கன மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் தோண்டப்படவுள்ளது.

இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று அதானி குழும நிறுவனர் கவுதம் அதானிக்கு திறந்த மடல் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுரங்க தொழிலாளர்களின் உடல் நலம் பாதிக்கும். பருவ நிலையில் மாற்றம் ஏற்படும். கடல் பூங்காவின் வளம் பாதகிகப்படம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஐயன் சப்பல் குறிப்பிடுகையில் ‘‘இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கிரிக்கெட் உணர்வு உள்ளது. இந்த சுரங்கம் அந்த உறவை பாதிக்கும் என்றும் நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில்,‘‘ நிலக்கரி எரிப்பதன் மூலம் ஏற்படும் மாசு தான் உலக வெப்பமயாதலுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இந்த பிரச்னை உள்ளது. மேலும், கடந்த மாதம் லான்செட் என்ற உலக மருத்துவ இதழில் இந்த சுரங்கத் திட்டம் செயல்படுத்தினால் பொது மக்களுக்கு சுகாதார பேரழிவு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை. சுரங்கம் அமையவுள்ள நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களுக்கும் இதில் உடன்பாடில்லை.

நிலத்தடி நீராதாரத்தை இது பாதிக்கும். இந்த நீராதாரத்தை நம்பியுள்ள விவசாயகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உலக வெப்பமயமாதல், மக்கள் உடல் நலம், மக்களின் விருப்பம் ஆகியவற்றை கொண்டு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்தியா மீதான ஆஸ்திரேலியாவின் மரியாதையை சேதப்படுத்த கூடிய அவமான திட்டமாகிவிடும். இந்த திட்டத்தில் அதானி குழுமம் இன்னும் முழு அளவில் முதலீடு செய்யவில்லை என்று நம்புகிறோம். அதனால் இந்த திட்டத்தை கைவிடும் முடிவை எடுக்க வேண்டும். புதுப்பிக்கத்த எரிசக்தி துறையில் தாங்கள் முதலீடு செய்தால் ஆஸ்திரேலிய மக்கள் வரவேற்பு தெரிவிப்போம்’’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.