டில்லி 

சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை இயக்குநரைப் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்கிறது. இந்த சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் என்றாலும் 5 ஆண்டுகள் வரை பதவிக்காலத்தை நீட்டிக்க முடியும்.

தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக டிஜிபியாக இருந்துள்ளார் சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் , இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1986 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், தற்போது சிபிஐ இயக்குநராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவு பெற்றதும் சிபிஐ இயக்குநர் பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.