ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அந்தாதுன்.

பல விருதுகளை வென்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கினார். அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். அந்தாதுன் படத்தை பொன்மகள் வந்தாள் பட புகழ் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்குகிறார்.

இந்நிலையில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளான இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதில் நடிகர் பிரசாந்த் பியானோ வாசிக்கிறார். இந்த படத்திற்காக பியானோ பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. மாரி சக்தி என்ற பியானோ கலைஞர் பிரசாந்திற்கு ட்ரைனிங் தந்துள்ளார். முருக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார். பாலாஜி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.