மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக் கொண்ட பிரசாந்த் பூஷன்…!

Must read

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியானது. இது குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கருத்து தெரிவித்தார். ஹெல்மெட் அணியாமல், தலைக்கவசமின்றி அவர் உள்ளார் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனையடுத்து, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை குறித்து   தீர்ப்பை ஆகஸ்டு 20ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தது.

அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். அதே நேரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பிரசாந்த் பூஷனுக்கான தண்டனையை  அறிவிக்கப்பட்டது. அதன்படி, பூஷனுக்கு ரூ.1 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. செப்டம்பர் 15க்குள் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை என்றும் கூறியது.

இந் நிலையில் பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நீதிமன்ற தீர்ப்பையடுத்து மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக கூறி உள்ளார்.

More articles

Latest article