தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

நேற்று (ஆகஸ்ட் 9) கோவளத்தில் உள்ள வீட்டில் சறுக்கி விழுந்து இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

“ஒரு சிறிய விபத்து.. லேசான எலும்பு முறிவுதான்.. இருந்தாலும் எனது பாதுகாப்பு கருதி ஹைதராபாத்தில் உள்ள நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன். எல்லாம் சரியாகிவிடும். கவலை வேண்டாம். அன்புடன் என்னை நினைவில் கொள்ளுங்கள்.” என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.