பெங்களூரு
திரைப்பட நடிகர்கள் அரசியல் தலவராவது நாட்டிற்கு பேரழிவை அளிக்கும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
தற்போது அரசியல் குறித்து பல திரைப் பிரமுகர்கள் இணைய தளங்களில் தங்களின் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “மிகப் பெரிய தவறுகளை செய்பவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்க மாட்டார்களா?” என மோடி குறித்து பதிந்திருந்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்கள் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி பிரகாஷ் ராஜின் கருத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர், “திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர் ஆவது நாட்டுக்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் என்றும் விரும்புவதில்லை. என்னைப் பொறுத்தவரை நான் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக இல்லை” என தெரிவித்துள்ளார்.