மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இவர்களின் இந்த சந்திப்பை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

பாஜக கட்சியினரைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், தன் ட்விட்டர் பக்கத்தில் “அப்படிப் போடு தருணம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி!” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே சமூக வலைதளத்தில் காலை முதலே #GoBackModi, #ModixijinpingMeet, #TNWelcomesModi, #TNWelcomesPMModi என பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது.