சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

இந்த படத்தின் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் சிவா தரப்பு கீர்த்தி சுரேஷுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.