சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்தகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.  மேலும், பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி  வழங்குவதாகவும் அறிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பாராட்டினார்.

சென்னையில் நடைபெற்ற ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதிப்புறு முனைவர் பட்டத்தைவழங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கும்,  பிரபல பின்னணி பாடகி  பி.சுசீலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.‘  5 முறை தேசிய விருது பெற்ற பி.சுசீலா, பல்வேறு மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசியவர்,  “இந்தியாவிலேயே இசைக்கு என உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவி உடன் செயல்படும் பல்கலைக்கழம் என்றவர், இந்த பல்கலைக்கு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் தான் வேந்தராக இருக்கும் சிறப்பு உள்ளது.

இப்படி முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால் தான் பல்கலை. சிறப்பாக வளர முடியும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதைந்துவிடும். 2013-ம் ஆண்டே இந்த பல்கலை வேந்தர் முதலமைச்சர் தான் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்கள். இதற்காக அவரை மனதார பாராட்ட வேண்டும். இந்த முடிவை எடுத்த ஜெயலலிதா அவர்களை மனதார பாராட்டுகிறேன். இந்த பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.