இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாம் நிலை வீரரான பேபியானோ குருவனா-வை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
FIDE போட்டிகளில் இறுதிப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 25ம் தேதி நிறைவடைகிறது.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தா உலகின் முன்னணி வீரர் மஃனஸ் கார்ல்சன் உடன் விளையாட உள்ளார்.