இந்தியாவின் மிகவும் வயதான யானையான பிஜூலி பிரசாத் தனது 89 வயதில் அசாமின் சோனித்புரி மாவட்டத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தது.

கம்பீரமான யானை வயது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், தி வில்லியம்சன் மாகோர் குழுமத்தின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் இன்று இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர்காங் தேயிலை தோட்டத்திற்கு குட்டியாக கொண்டு வரப்பட்ட பிஜூலி பிரசாத் பின்னர் பெஹாலி பகுதிக்கு மாற்றப்பட்டது.

இது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட பழமையான ஆசிய யானையாகும்.

பிஜூலி பிரசாத் இறந்ததை அறிந்து, ஏராளமான விலங்கு ஆர்வலர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் நேரில் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.