சுஜித் இயக்கத்தில் , பிரபாஸூடன் இணைந்து ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள “சாஹோ”.

நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் இன்றே திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மெஹபூப் நகரில் உள்ள திருமலா தியேட்டரில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது அவர் மீது மின்சார வயர் உரசி எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தியேட்டர் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

[youtube-feed feed=1]