சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்பட்டது.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை மற்றும் மாலையில் மின் தடை ஏற்பட்டது.

பல மணி நேரங்கள் நீடித்த இந்த மின் தடையால் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமன்றி வீடுகளில் உள்ள சிறியவர்கள் மற்றும் வயதானவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
கோடை காலம் என்பதால் மின் தேவை அதிகம் உள்ள நிலையில் மக்களவை தேர்தல் முடிவடைந்ததும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]