போபால்:

டல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் காரணமாக 5 பைசாவுக்கு 1 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

பான்டர்பனில் நடைபெற்று வரும் இரண்டு நாள் நதி மகோத்சவ் மாநாட்டை தொடங்கி  வைத்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  சில மாநிலங்கள் நதிநீர் விநியோகத்தில் சண்டை போடுவது துரதிருஷ்டவசமானது என்று கூறினார்.

மேலும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்று பேசிய அவர், பாகிஸ்தானுடன் ஆறு ஆறுகளை  இந்தியா பகிர்ந்து கொள்கிறது என்றும், மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் பாக்கிஸ்தான் நோக்கி பாய்கிறது. ஆனால் எந்தவொரு செய்தித்தாளும் அது குறித்து எழுதுவதில்லை என்று ஆதங்கப்பட்டார்.

இந்தியாவில் பல இடங்களில் கடல் நீரை மாற்றுவதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர்,  தமிழகத்தில் தூத்துக்குடியில் இதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

இதன் காரணமாக 5 பைசாவுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறினார்.