கிருஷ்ணகிரி

ரூ. 2000 நோட்டுக்குப் பதில் ரூ 500 நோட்டு  தரப்படும் எனக் கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூருக்கு செல்லும் வழியில் மேம்பாலத்தையொட்டி நேற்று பல இடங்களில் சுவரொட்டி ஒன்று காணப்பட்டது.  சுவரொட்டியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு செல்போன் நம்பர் ஒன்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து குழப்பம் அடைந்தனர். ஒரு சிலர் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தந்தால் தான், 3 ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றிக் கொடுப்பதற்கு 500 ரூபாய் கமிஷன் என்றும் கூறினார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் தொலைப்பேசியில் பேசி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில்ல் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் என்பதும், பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்யும் போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 4 கிடைத்ததாகவும், அதைச் சென்னை சென்று ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும், ஆகவே ரூ.500 கமிஷன் பெற்று இதைப் போல மாற்றலாம் என்ற எண்ணத்தில் தான் சுவரொட்டி ஒட்டியதாகவும் கூறினார்.

அவர் காவல்துறையினரிடமும்  ஏதேனும் 2 ஆயிரம் ரூபாய் உள்ளதா என்று கேட்டு அவற்றை மாற்றித் தருவதாக அந்த நபர் கூறி உள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்த காவ்லதுறைஇ ர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் கிருஷ்ணகிரி அற்றும் பர்கூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.