சென்னை:
தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி, எம்.எஸ்.,மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புக ளுக்காக மொத்தம் 1,646 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் சேர்ந்து படிக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் துவங்கி உள்ளன.
இதற்கான விண்ணங்களை www.tnhealth.org, www.tnmedicalselection. org ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய மார்ச் 23-ஆம் தேதி (மாலை 5 மணி) கடைசிநாள்
பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு மார்ச் 26-ம் தேதி (மாலை 5 மணி) கடைசி நாளாகும்.
அரசு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்: செயலர், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு, 162, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கலந்தாய்வுக்கான தகுதிப் பட்டியல் ஏப். 9ம் தேதி வெளியிடப்படும்.
முதுநிலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்ற பின்பு, தமிழக ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
முதுநிலை வகுப்புகள் மே 1-ஆம் தேதி தொடங்கும். முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான அனைத்து நடைமுறை களையும் மே 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு இதுவரை தேதி அறிவிக்கப்படாத நிலையில், அது அறிவிக்கப்பட்ட பின்னரே, தமிழக ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.