போர்ச்சுக்கல்:  

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்காக மார்ச் 1 ஆம் தேதி வரை போர்ச்சுகலில் முழுஅடைப்பு தொடர்வதற்கு போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெல்லோ டிசௌசா தெரிவித்துள்ளதாவது:
போர்ச்சுகீஸ் மக்கள் சரியான கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், போர்த்துகீசிய மக்கள் மற்றொரு கோடை மற்றும் இலையுதிர் காலம் இல்லாமல் வசந்த காலத்திலிருந்து துவங்க வேண்டியிருக்கும்.

ஐரோப்பாவிலும் போர்ச்சுகலிலும் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாமதங்கள் இருக்கும். ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நாங்கள் விரைவாக தடுப்பூசி போடுவோம் என போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெல்லோ டிசௌசா தெரிவித்துள்ளார்.