சின்னத்திரை நடிகர் பிரதீப் தற்கொலை!

Must read

ஐதராபாத்.

திருமணமான சில மாதங்களில் பிரபல சின்னத்திரை நடிகர் பிரதீப் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  பிரதீப். இவர் இன்று அதிகாலை ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரதீப் தன்னுடன் நடித்த  ’பாசமலர்’ சீரியல் நாயகியான,  நடிகை பாவனியுடன் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பிரதீப் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

Latest article