கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நேரத்தில் இருந்து பல முக்கிய சினிமா திரைப்பிரபலங்களின் மரணம் ரசிகர்களை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.
சில தினங்களுக்கு முன்னர் குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நரேஷ் கனோடியா கொரோனா வைரஸ் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குஜராத் சினிமாவில் அமிதாப் பச்சன் என புகழப்படும் இவர், பாஜகவில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.