மிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை நிலா. சமீபத்தில் ஜூனியர் என்டிஆரை விட மகேஷ்பாபுவை பிடிக்கும் என்று சொல்லி பிரச்னையில் சிக்கினார். ஜூனியர் என்டிஆரை பிடிக்காது என்ற தொணியில் பதில் அளித்த நிலாவை நடிகரின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித் ததுடன் மானபங்கம் செய்துவிடுவோம் என்று தாறுமாறாக திட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிலா போலீசில் புகார் அளித்தார். அதைக்கண்டு அவருக்கு நடிகை பூனம் கவுர் அறிவுரை வழங்கினார்.


’ரசிகர்கள் அப்பாவிகள். அவர்கள் பெயரில் அரசியல் வாதிகள் சிலர் பொய்யாக இணைய தளத்தில் கணக்கு தொடங்கி சிக்கலை ஏற்படுத்துவார்கள். அந்த அரசியல் பற்றி எனக்கு தெரியும். வீணாக அந்த சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று பூனம் கூறி உள்ளார்.


நடிகை நிலா தமிழில் மருதமலை உள்ளிட்ட பல படங்களிலும், நடிகை பூனம்கவுர் பயணம் உள்ளிட்ட பல படங் களிலும் நடித்திருக்கிறார். நிலாவின் நிஜப் பெயர் மீரா சோப்ரா. படத்தில் நடிப்பதற்காக அவரது பெயரை எஸ்.ஜே.சூர்யா நிலா என்று மாற்றினார்.