ருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி கொலை செய்ததற்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை தமன்னா டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். மனிதனோ விலங்கோ யாருக்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை அழிக்க முயல்வது உலக நியதிக்கு எதிரானது. மனிதம் கற்க வேண்டும் மனிதானா இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.


தமன்னாவின் இந்த மெசேஜுக்கு சிலர் எதிர் கேள்வி கேட்டிருக்கின்றனர். இந்தியாவில் நடக்கும் அநியாயம் உங்களுக்கு தெரியாதா அதை ஏன் தட்டிக் கேட்கவில்லை. ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஏழை எளியவர்கள் எவ்வளவு கொடுமை அனுபவிக்கிறார்கள். அதை எல்லாம் தட்டி கேட்க மறுப்பது ஏன் ? என்று தமன்னாவை கேட்டிருகின்றனர். இந்தி நடிகர் அபய் தியோல் எனபவரும் இதேபோல் மறைமுகமாக தமன்னா விடம் கேட்டிருகிறார்.
இன்னும் சிலர் சிவப்பாவதற்காக முக கிரீம் அழகு சாதன விளம்பரங்களில் நடிக்கும் நீங்கள் எப்படி கருப்பின மக்களுக்கு குரல் கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.