ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே. பூஜா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான அல வைகுண்டபுரம்லோ படம் சூப்பர் ஹிட்டானது. அதுவும் அந்த படத்தில் வந்த புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று இரவு ஹேக் செய்யப்பட்டது.பூஜாவின் டிஜிட்டல் குழு துரிதமாக செய்லபட்டு கணக்கை சரி செய்துவிட்டது. இதையடுத்து பூஜா ட்விட்டரில் கூறியதாவது,
என் இன்ஸ்டாகிராம் கணக்கின் பாதுகாப்பை நினைத்து கடந்த ஒரு மணிநேரமாக கவலையாக இருந்தது. இந்த நேரத்தில் உடனே உதவி செய்த என் தொழில்நுட்ப குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வழியாக என் இன்ஸ்டாகிராம் கணக்கு எனக்கு கிடைத்துவிட்டது. கடந்த ஒரு மணிநேரத்தில் என் கணக்கில் ஏதாவது மெசேஜ் அல்லது போஸ்ட் போடப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
பூஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்த நபர் அதில் மீம்ஸ் போட்டிருந்தார்.