தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி. பல்வேறு மலையாள படங் களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு மலையளத்தில் பார்வதி நடித்த டாக்டர் அன்னு பரபரப்பாக பேசப் பட்ட படமாக அமைந்தது.
தற்போது ராச்சியம்மா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் கேரளாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி ஜிம் பயிற்சி செய்யும் புகைப்படங்களை பார்வதி இன்ஸ்டாகிரமில் வெளியிட்டி ருக்கிறார். ’கடுமையாக முயன்றால் கடுமையே ஓடிவிடும்’ என்று பார்வதி கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பெண்களுக் காக சமூக பிர்னைகளையும் பேசி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபடு கிறார். கடந்த 2017ம் ஆண்டு பார்வதி இந்தியில் ‘கரிப் கரிப் சிங்கிள்’ படத்தில் மறைந்த நடிகர் இர்பான் கானுடன் சேர்ந்து நடித்த பார்வதி பின்னர் இந்தி பக்கம் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், மலையாளம் இந்தி என மொழிகள் பற்றி கவலை இல்லை ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தால் நான் நடிப்பேன் என்கிறார் பார்வதி,