சென்னை,

மிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான  பொன்னையனும் வந்துவிட்டார்.

சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனியாக வந்தபிறகு, அவருக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏக்கள்  ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தற்போதைய எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சசிகலா முகாமி லிருந்து விலகி வந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது பொன்னையனும் பன்னீருக்கு பக்கபலமாக அவர் பக்கம் வந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன்,அதிமுகவில் 90 சதவீதம் பேர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறினார்.

மேலும், முதல்வர் பன்னீர் செல்வம் அண்ணாவை போல் பணிவுடன் செயல்படுபவர் என்றும், அதிமுக தொண்டர்கள் தான் தங்களது பொது செயலாளரை தேர்வு செய்வர் என்றார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரையும் பார்க்க சசிகலா அனுமதிக்க வில்லை. கட்சி தலைமையும், ஆட்சி தலைமையும் பன்னீர்செல்வத்திடம் தான் இருக்க வேண்டும். கட்சியும் ஆட்சியும் தொண்டர்களின் விருப்பதிற்கேற்ப நல்ல தலைமையின் கீழ் இருக்க வேண்டும்.என கூறினார்.

ஜெயலலிதா  மறைவுக்குப் பிறகு  சசிகலாவை தீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்தவர் பொன்னையன். “ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா” என ஸ்ரீராம் சிட்பண்ட் நாமினி பேப்பரை காட்டியும் சர்ச்சையில் சிக்கியவர் பொன்னையன்.

இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்தார். அதையடுத்து  அதிமுக அவைத் தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த பொன்னையனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதையடுத்து இன்று முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து தனது ஆதரவு தெரிவித்தார்.

வரிசையாக ஒவ்வொரு எம்எல்ஏவாக சசிகலா முகாமிலிருந்து பன்னீர் முகாமிற்கு தாவி வருவது சசிகலா தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.