சென்னை:  திமுக முன்னாள அமைச்சர் பொன்முடிக்கு 3ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவரது தொகுதியான  திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்எல்ஏ பதவி தானாக பறி போன நிலையில், அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால். அவரது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவிகள் தானாகவே  தகுதி நீக்கம்  ஆனது. இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியானது. ஆனால், இதை தமிழ்நாடு சட்டப்பேரவை முறையாக அறிவிக்கவில்லை. ஆனால், அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்து சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அது உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டு விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பொன்முடியின் தொகுதி தொடர்பாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொன்முடி பதவி இழப்பால் காலியாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக,  தேர்தல் ஆணையத்திற்கு  சட்டபேரவை செயலகம்  முறைப்படி கடிதம் எழுதியுள்ளது.

இதை ஏற்கும் இந்திய தேர்தல் ஆணையம், நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலுடன்,   விளவங்கோடு தொகுதி  மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.