சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்ற பொன்முடி, தனது எம்எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதை, சென்னை உயர்நீதிமன்றம்  தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில்,  வழக்கை விசாரித்த  உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகிய  இருவரும் குற்றவாளிகள் என டிச.19-ஆம் தேதி தீா்ப்பளித்து தண்டனை விவரங்களை  டிசம்பர் 21 அறிவித்தாா்.  அதனப்டி, பொன்முடிக்கு மற்றும் அவரது மனைவிக்கு தலா  3 ஆண்டுகள் சிறை தண்டனை உடன்  தலா ரூ.50 லட்சம் அபராதம்  விதித்தும்,  பொன்முடி தரப்பு வேண்டுகோளை ஏற்று சரணடைய ஒரு மாத காவலம்  வழங்கியும்  நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து ஒரே நாளில் ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை பொன்முடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு  முதலமைச்சர் ஸ்டாலினினி  ஸ்டாலினுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்  நடைபெற்றது.

[youtube-feed feed=1]