சென்னை: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதலமைச்சரின் கோரிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையை இடைக்காலமாகத்தான் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அவருக்கு அமைச்சராக பதவி வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தம் மட்டுமே செய்துள்ளது. அவரது தண்டனையை முழுமையாக நிறுத்தி வைகாகதவரையோ அல்லது ரத்து செய்யும் வரையோ அவர் சட்டமன்ற உறுப்பினராக முடியாது. தண்டனையை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது. தண்டனையை நிறுத்தி வைப்பதால், மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என்று மட்டுமே அர்த்தம் ஆகிறது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் விலகியது. இதையடுத்து அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பொன்முடி தரப்பில், எ உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கில், அவரது சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதாவது, சிறை தண்டனையை ரத்து செய்யாமல் சஸ்பெண்டு மட்டுமே செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பின் நகல் வந்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் எம்எல்ஏ ஆனதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து, பொன்முடியை அமைச்சரவையில் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கும் வகையில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி, கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, டெல்லி சென்ற ஆளுநர் அங்கு சட்ட நிபுணர்கள் கலந்துரை பேசிய நிலையில், நேற்று ( 16ந்தேதி) மாலை சென்னை திரும்பினார். இதையடுத்து, திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், பொன்முடி மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் இடை நிறுத்தம் மட்டுமே செய்துள்ளது. தீர்ப்பு வழங்கப்படவில்லை.வ ழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம். ஆனால் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது” என்றும், இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அமையும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…