சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெடில் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சந்தை 17ந்தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் உள்ள இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சந்தையானது வரும் 17ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று கரும்பு மட்டும் விற்பனை செய்யப்பட்டது. இன்றுமுதல், மற்ற காய்களிகள், மளிகை சாமான்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கலுக்கு தேவையான கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சந்தைக்கு பொதுமக்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.