லாஸ் ஏஞ்சல்ஸ்:
RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இசையமைப்பாளர் கீராவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல். சிறந்த பாடல் பிரிவில் விருதை தட்டியுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் பாலையா நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் இந்த படம் இந்திய திரையுலகின் பெருமைக்குரிய திரைப்படம் என்று போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.