சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

நாடு முழுவதும் தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15)  கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு .  வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது என்று பிரதமர் மோடியும், அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று  முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதனின் உழைப்பிற்கும். இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இதன் மூலம். தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படு வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

[youtube-feed feed=1]