பொங்கல் ரெயில் முன்பதிவு: அரை மணி நேரத்தில் அனைத்தும் காலி!

Must read

சென்னை,

டுத்த ஆண்டு ஜனவரி மாதம் வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

இந்த புக்கிங் தொடங்கி அரை மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகின. இதனால் முன்பதிவுக்கு காந்திருந்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர்.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வர இருக்கும் தைத்திருநாளுக்கு வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பிப்பது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான அட்வான்ஸ் ரெயில் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கி யது. இந்த முன்பதிவு தொடங்கி அரை மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுக்களும் புக்கிங் செய்யப்பட்டு விட்டது.

ஏராளமானோர் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஏஜெண்டுகள் மூலம் முன்பதிவு செய்து விடுவதால், ரெயில் நிலையத்தில் முன்பதிவுக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

More articles

Latest article