புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு தலைவர்கள் தங்களின் பிரசாரப் பயணங்களை திட்டமிடுகின்றனர்.

அனல் பறக்கும் வெயிலிலும் உடல்நலத்தில் அக்கறை செலுத்தினாலும் அதையும் மீறி வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளருமான நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமச்சிவாயத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

[youtube-feed feed=1]