புதுச்சேரி:
“நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் டிக்கெட், புதுவை அரசு ஊழியர்களுக்கு  ஊக்கப்பரிசாக வழங்கப்படும்”என்று அம்மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
download (1)
புதுவை துணை நிலை ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் கிரண்பேடி.  பதுவை, யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு துணை நிலை ஆளுநருக்கு மிகுந்த அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்தி அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் கிரண்பேடி.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் என்ற முறையில் ரஜினி, புதுவையின் முன்னேற்றத் தூதராக (Brand Ambassador for Prosperous Pudhucherry) வர வேண்டும். புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கபாலி படத்தின் டிக்கெட்டுகளை ஊக்கப் பரிசாக அம்மாவட்ட கலெக்டர் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது பயனுள்ளதாக இருக்கிறது” என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதற்கு,  “அரசு பணத்தில் சினிமா டிக்கெட்டுகள் வழங்க வேண்டுமா” என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.