மகனுக்கு  11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்

Must read

ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தி, தனது  மகன் முன்னா மராந்திககு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னா மராந்தியின் திருமணம் கடந்த  திங்கட்கிழமை 27-ம் தேதி நடந்தது. திருமண வரவேற்பு நேற்று ( ஜூன் 29-ம் தேதி)  நடைபெற்றது.
மணமகளின்  பள்ளி சான்றிதழின்படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005.  அதாவது அந்த சிறுமிக்கு 11 வயதே ஆகிறது. அவர்  ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
 
w
இதற்கிடையே மணமகன் முன்னா மீது இன்னொரு புகார் கிளம்பியிருக்கிறது.   உறவுக்கார சிறுமி ஒருத்தியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் பெற்றோர் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரிதிஷ் குமார் , “சிறுமிக்கு திருமணம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.  இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இன்னொரு கொடுமை:  ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாசஸ்,  இந்தத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தாராம். கடைசி நேரத்தில் வேறு ஏதே அவசரப்பணியால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டதாம்!

More articles

Latest article