புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது.

காமாட்சி அம்மன் கோயில் அருகே இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை மயங்கி விழுந்தது.

பின்னர் சிறிது நேரத்தில் மரணமடைந்தது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

கோயில் யானை மரணமடைந்த செய்தி அறிந்து மக்கள் திரண்டு வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிரேன் உதவியுடன் யானையின் உடலை அங்கிருந்து ஏற்றிச்செல்லும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.