புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 2 பேராசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லூரிக்கு மாணவிகள் வர வேண்டும் என நிர்வாகம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் மீண்டும் சில பகுதிகளில் பகுதி நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கட்டுக்குள் இருந்த தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக,  மாணவிகள் கல்லுரிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செமஸ் டர் தேர்வு ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.