சென்னை:
மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு  இருப்பதாகதிமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மறுப்பு தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன், இந்த வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை ஸ்டாலின் பேசிவருவதாகவும், தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமென பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய  விசாரணையின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பொள்ளாச்சி ஜெயராமன் குறித்த ஸ்டாலினின் பேச்சை செய்தியாக வெளியிட்ட, தொலைக்காட்சி, நக்கீரன், வார இதழ் ஆசியர்களையும் எதிர்மனு தாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.