கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…

Must read

பெங்களூர்:
ர்நாடக அணைகள் நிரம்பியுள்ளதால், அங்கிருந்து  காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தற்போது காவிரியில்  நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேராங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கர்நாடகாவின்  கபினி அணையில்  இருந்து வினாடிக்கு 1500கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4722 கன அடி தண்ணீரும்  பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரானது,  நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5,500 கன அடியாக வந்த கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தது.
இன்று காலை 12  மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர்.

More articles

Latest article