சென்னை,
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் எந்த கொள்கைகளுக்காக அரசியலுக்கு வருகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கேள்வி விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில்,
நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருக்கு 20 முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும்” என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி தெரிவித்துள்ளார்.
மேலும், “அ.தி.மு.க.வை தலமையேற்று நடத்திய ஜெயலலிதா மறைந்துவிட்டார், தி.மு.க. தலைவர் கருணாநிதியால் மூப்பு காரணமாக இயங்க முடியவில்லை. இதனால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று ஆணித்தரமாக கூறி வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் ரஜினிகாந்துக்கு சரமாயாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
ரஜினிகாந்த எந்த கொள்கைகளுக்காக அரசியலுக்கு வருகிறார்… அவர் எந்த கொள்கையில் நிற்கின்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும்,
வகுப்புவாத அரசியல், காவிரி பிரச்சனை, ஊழல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் நிலைப்பாடு என்ன?
அகில இந்திய அரசியலில் என்ன தலைமையை ஏற்றுக்கொள்ளப்போகின்றார்? என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் பீ ட்டர் அல்போன்ஸ்.
மேலும், தமிழகத்தின் நலனுக்காக அதிமுக அணிகள் இணைவதாக கூறுவது இந்த நூற்றாண்டில் அரசியல் நகைச்சுவை என்றும், பழனிசாமி அரசு ஊழல் என ட்விட்டரில் விமர்ச்சித்தவர் மைத்ரேயன், அதனை ஆமோதித்தவர் ஓபிஎஸ் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ரஜினியை சந்தித்துள்ள நிலையில் பீட்டர் அல்போன்சின் ரஜினி பற்றிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.