தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக-வுக்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு ’எங்கள் மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. வாழ்த்துகளுக்கு அவர் பதிலளிப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!!

இந்த தொற்றுநோய் காலத்தில், நமது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல் முறையாக நான் காண்கிறேன்! இந்த நேர்மறை எப்போதும் இருக்கட்டும்!’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.