டெல்லி: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியிலிருந்து நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஒரு அரசியல் கட்சி தொடங்கினால், அதுதொடர்பாக 30 நாட்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற்றாமல் மட்டுமே, அந்த கட்சிக்கு அங்கீகாரமும், நிரந்தர சின்னமும் வழங்கப்படும். ஆனால், நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான கட்சிகள், அங்கிகாரம் இல்லாம் செயல்பட்டு வருகின்றன.

இதுபோன்ற கட்சிகளை களையெடுக்க கடந்த மே மாதம் இந்திய தேர்தல் ஆணையம் முன்வந்தது. அதன்படி,  1951 சட்டம் 29A மற்றும் 29C பிரிவுகளின்கீழ், பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்,  உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் நீக்கப்படும் என மே 25-ம் தேதி  அறிவித்தது, அதன்படி, பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளை நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் ஏதேனும் கட்சி பாதிக்கப்பட்டால், அந்த  அரசியல் கட்சிகள் உத்தரவு வெளியான 30 நாட்களுக்குள், ஆண்டு வாரியான தணிக்கை கணக்குகள், தேர்தல் செலவு அறிக்கை, நிதிப்பரிவர்த்தனை உள்ளிட்ட முறையான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகள் பட்டியிலிருந்து நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.