சென்னை: புதியஅரசியல் கட்சியைதொடங்கப்போவதாக அறிவித்துள்ள சசிகலா, கட்சி பெயரை இதுவரை அறிவிக்காமல்,   அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

அவரது திடீர் அரசியல் கட்சி அறிவிப்பு அரசியல் பேரத்திற்கான அச்சாரம் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கும், அவரது அரசியல் சறுக்கலுக்கும் காரணமானவர் அவரது உயிர்த்தொழி சசிகலா என குற்றம் சாட்டப்படும் நிலையில், ஜெ. மறைவுக்கு பிறகு, ஆட்சியை கைப்பற்ற அவர் எடுத்த நடவடிக்கை தமிழக மக்களை முகம்சுழிக்க வைத்தது.

இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்ததால், வேறு வழியின்றி, தனது அடிமை பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டு, சிறை சென்றார். தண்டனை அனுப்பவித்து வெளியே வந்தவரை கட்சியில் சேர்க்க எடப்பாடி மறுத்து விட்டதுடன், கட்சியை விட்டே நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இதனால்,  வேறுவழியின்றி,  அவ்வப்போது தனது அரசியல் அடிவருடிகளைக்கொண்டு, அரசியல் பம்மாத்துக்களை காட்டி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த சலசலப்புக்கு மத்தியில் அடுத்த இரு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அவருக்கு அடைக்கலம் கொடுக்க அதிமுக முன்வராததால்,  புதிய கட்சியை தொடங்கி உள்ளர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவர் திருமகன் குருபூஜையின்போது, டிடிவி, ஒபிஎஸ்,செங்கோட்டையன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து உரையாடி யதுடன்,  அதிமுகவை ஒன்றிணைக்கப்போவதாக அறைகூவல் விடுத்தனர். ஆனால், அது நிறைவேறாத நிலையில், செங்கோட்டையன் தவெகவுக்கு ஓடிவிட்டார். டிடிவி தினகரன் அதிமுக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். ஓபிஎஸ் மற்றும் சசிகலா தனித்து விடப்பட்டு, அரசியல் அனாதையாகி உள்ளனர். ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தனி மரமான சசிகலா, அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.  ஜெ.மறைவின் போது,  அதிமுகவின் இடைக்கால  பொதுச்செயலாளராக சில காலம் பதவி வகித்த  த சசிகலா ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று  (பிப்ரவரி 24) புதிய கட்சி தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காத நிலையில், எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார்

ராமதாதபுரம் மாவட்டம் கமுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சசிகலா, தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார். இது தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவிற்கு பெரும்பாலான தேவர் சமுதாய ஆதரவு  உள்ள நிலையில், சசிகலாவின் திடீர் அரசியல் பிரவேசம் தமிழக  அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, கமுதி, ராமநாதபுரம் உள்பட சில மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில்,  சசிகலாவுக்கு  அவரது சமுகத்தினரின் வாக்கு வங்கி உள்ளதால், அவரது வரவால், அதிமுக, திமுக உள்பட முக்கிய  கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அரசியல் பேரத்துக்காக சசிகலா புதிய கட்சியை தொடங்கி உள்ள சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

சசிகலா அறிமுகப்படுத்திஉள்ள கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துடன், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.  கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கியுள்ளார் சசிகலா. விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கும் அவர் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க போகிறாரா? இல்லை திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவரது புதிய கட்சி அறிவிப்பானது, அரசியல் பேரத்திற்கானது என்றே விமர்சிக்கப்படுகிறது.

[youtube-feed feed=1]