சென்னை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இன்று காலை 10.30 மணிக்கு காவல்துறை விசாரணை நடத்த உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். தாம் சீமானுடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பம் அடைந்து அதைச் சீமானின் தூண்டுதலின் பேரில் கலைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனு காவல்துறையினரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் புலன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு காவல்துறையினர் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர் அதில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.