கிருஷ்ணகிரி: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில்,  போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயற் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் உறவினருடன் சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போதை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரை தாக்கிய குற்றவாளி களை தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.பாலியல் குற்ற சம்பவம்

தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பங்கள் தினந்தோறும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான 12 பாலியல் சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில்,  கிருஷ்கிரியில் உறவினரோடு மலைக்கு சென்ற பெண்ணை  மர்ம நபர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில், இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட  போதை இளைஞர்களை காவல்துறையினர் தேடினர். அவர்கள் மலைப்பகுதியில் இருந்ததை அறிந்த, அவர்களை கைது செய்யச் சென்றனர். அப்போது 2 பேர் சிக்கிய நிலையில், மேலும் 2 பேர் அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் அவர்களை  சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால், அங்கிருந்த போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.