சென்னை

மிழக  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மும்மொழி கொள்கையை  ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என தமிழக அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது. ஆயினும் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

மத்திய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதான் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலை புகுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்., தமிழகம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 5 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிச்ம்,

 “தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியைத்தான் கேட்கிறோம். ஆனால் இந்த வருடம் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம்.

இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது. மொழிப்போரில் பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களின் உரிமைதான் கல்வி உரிமை, மொழி உரிமை. இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.”

எனறு கூறியுள்ளார்.

செய்தியாளர்கள், “அண்ணா சாலையில் எந்த இடத்தில் வரவேண்டும்?” என அண்ணாமலை கேள்வியெழுப்பியது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்யதற்கு “அவரைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று பதில்  அளித்1111தள்ளார்.