விருதுநகர்: மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் காவல் நிலையத்திற்கு செல்லும் மின்சாரத்தை கட் பண்ணினார் மின்வாரிய ஊழியர். இந்த ருசிகர சம்பவம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்  பகுதி மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருபவர் சைமன். சம்பவத்தன்று, மின் பணிக்காக,  அவர்  தனது இருசக்கர வாகனத்தில் மேலும் 2 தொழி லாளர்களை  அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, சாலையில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்,  அப்போது அந்த வழியாக மின்வாரிய ஊழியர் சைமனின்  இரு சக்கர வாகனத்தை,  3 பேர் வந்த காரணத்தினால் பறிமுதல் செய்ததாக கூறப்படு கிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து,  மின்வாரிய ஊழியர் சைமன் உதவி மின் பொறியாளர்  புகார் தெரிவித்த நிலையில், அவரது ஆலோசனை யின்பேரில்,  கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின்வயரை  துண்டித்து, மின் இணைப்பை  கட் செய்ததாக  கூறப்படுகிறது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பின்றி காவல்நிலைம் இருண்டு கிடந்த நிலை யில், காவலர்களும் கடுமையாக பாதிககப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கூமாபட்டி உதவி காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரி டமும் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மூத்த அதிகாரிகள்  பஞ்சாயத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.