திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் வேல்முருகன். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவரை காதலிப்பதாக கூறி கடந்த மார்ச் 4ம் தேதி கடத்தி சென்று, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து திருமணம் செய்து, யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்திருக்கிறார். தனது மகளை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திருமணமான ஒரு மாதத்திலேயே உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என கூறி விட்டு அவரை பெற்றோர் வீட்டிற்கு செல்லுமாறு வேல்முருகன் கூறி உள்ளது தெரியவந்தது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாழ்க்கையை சீரழித்த வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பெண் வழக்கு ஒன்றை தொடுக்க, அதை விசாரித்த நீதிமன்றம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம் இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டது.

இந்நிலையில், மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த வேல்முருகனை, காவல்துறை ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான காவல் படையினர், தேடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]