vijayakanth_65
சிலை கடத்தலில் குற்றச்சாட்டப்பட்டுள்ள தீனதயாளனுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிலும் சோதனை நடத்த இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பழங்கால சிலைகளை வைத்து கலைக்கூடம் நடத்தி வந்த தீனதயாளன், பெரும் சிலை கடத்தல்காராக விளங்கியதை அண்மையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரது கலைக்கூடத்திலும் வீட்டிலும் காவல்துறையினர் சோதனையிட்டபோது கல் மற்றும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட 120 சிலைகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட ஓவியங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து மத்திய தொல்லியல் துறையினர், தீனதயாளன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் தொன்மை, தற்போதைய மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள். .
இதையடுத்து  கடந்த சனிக்கிழமை கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தீயதயாளன் ஆஜரானஆர். தற்போது  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் தினமும் ஆஜராகி வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் தீனதயாளனுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் ஓரிரு நாட்களில் சோதனை நடத்தப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் , அமெரிக்காவில் வசித்து வரும் தீனதயாளனின் மகன் கிரிதயாளனையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.